சாவகச்சேரியில் விபத்து; இளைஞரை அடையாளம் காணக் கோரிக்கை!

சாவகச்சேரியில் விபத்து; இளைஞரை அடையாளம் காணக் கோரிக்கை!

editor 2

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி ஐயா கடையடி என்று அழைக்கப்படும் பகுதியில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளஞைரை அரச பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.

அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை.

படுகாயம் அடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் அடையாளம் காணப்படாத நிலையில் அவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர் விளையாட்டு வீரர்கள் அணியும் உடைகள் அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article