வாகன இறக்குமதிகளின் கட்டுப்பாடுகள் குறித்து எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலப்பிட்டிய நேற்று நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
இலங்கையின் அந்நிய செலாவணியை புதிப்பிக்கும் வகையில் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்தும் பொருட்டு 2000 அளவிலான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளில் எந்தவித மாற்றங்களும் இல்லையென அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி வாகன தேவை எரிப்பொருள் செலவு டொலர் கையிறுப்பு என்பன குறித்ததான தற்போதய நிலைiமை குறித்து விசேட குழு ஒன்று ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்கால வாகன தேவை குறித்தும் உடனடியான வாகன தேவை குறித்தும் தற்போதய வாகன தேவை குறித்தும் அவ்விசேட குழு ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 29 வாகனங்கள் குறித்தும் அவர் தெளிவுப்படுத்தினார்.
சுகாதார அமைச்சுக்காக 21 கெப் வாகனங்களும் கல்வி அமைச்சுக்காக 3 பஸ்கள் தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனமும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்க்கு முன்று ரெம்ப்கள் என்ற வகையில் இவை கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.