வேம்படி மகளிர் கல்லூரியில் மயங்கிவிழுந்த ஆசிரியர் வைத்தியசாலையில் மரணம்!

வேம்படி மகளிர் கல்லூரியில் மயங்கிவிழுந்த ஆசிரியர் வைத்தியசாலையில் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரியில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் என்ற 32 வயதான ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article