கச்சதீவு பெருநாளைப் புறக்கணிக்கப் போகும் இந்தியர்கள்!

கச்சதீவு பெருநாளைப் புறக்கணிக்கப் போகும் இந்தியர்கள்!

editor 2

கச்சத்தீவு பெருநாளில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு தேவாலயத்திற்கான பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயப் பெருநாள், இந்த எதிர்வரும் பெப்ரவர் 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு அந்தோனியார் பெருநாளைப் புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

அதனடிப்படையில், தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சத்தீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும் அவர்கள் வழங்கிய பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Article