161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்கான விபரங்கள் அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிக்கலுக்குரிய 178 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த கட்டத்தில் வெளியிடப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.