முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இம்யுனோகுளோபுலின்
மோசடி ஒரு படுகொலை நடவடிக்கை என பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தரம் குறைந்த இம்யுனோ குளோபுலினை இறக்குமதி செய்தார் என்ற vகுற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் படுகொலையில் ஈடுபட்டுள்ளார் எனக் கருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மருந்துகளை இறக்குமதி செய்துள்ளதுடன் நாட்டின் அப்பாவி மக்களிற்கு அவற்றை வழங்கியுள்ளார் என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எத்தனை பேர் இதன்காரணமாக உயிரிழந்தனர் என்பது எங்களிற்கு தெரியாது ஆகவே இந்த விவகாரம் குறித்து நாங்கள் மேலும் ஆராய வேண்டும் இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் படுகொலைகள் போன்றது இது என கருதவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹிட்லரும் விசஊசியை செலுத்தி மக்களை கொன்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
கெஹலியவிற்கு வழங்கப்படும் தண்டனை இலங்கையில் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்பட்டமை மிகச்சிறந்த தண்டனையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது நோய் அறிகுறிகளை பரிசோதிப்பதற்காக தடுப்புமருந்துகளை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்க ளிற்கும் செலுத்தவேண்டும் எனவும்
அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல்வாதிகள் மோசடி ஊழலில் ஈடுபடுவது குறித்து வெட்கப்படுவதில்லை சிறைக்கு சென்ற பின்னரே அவர்கள் நோய்அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.