உயர்தரப் பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

உயர்தரப் பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

editor 2

இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 3,000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This Article