எதிர்வரும் ஒக்ரோபர் 14 ஆம் திகதி நாட்டுக்கு புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவாவார் என காணி மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவ்சிக்கையில்-
ஒக்ரோபர் முதல் வாரம் எவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மீண்டும் ஒரு முறையாவது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும்.
ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உல
கின் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
ரணில் விக்கிரமசிங்க நோய் வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர்.
அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கி
நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்.
நாட்டின் மூன்று விதமான தேர்தல்களில் வெற்றிபெற்ற குழுக்களில் 47 வீதமானவர்களைக் கண்டுபிடிப்பது கனவாகவே காணப்படுகிறது. அந்தக் கனவுகள் ஒருபோதும் நனவாகாது-என்றார்.