கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் 118ஆவது மைல் கல் அருகில் உள்ள கடவை திருத்தம் காரணமாக திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் தொடருந்து நாளை (07) மாலை 4.00 மணிக்கே திருமலையிலிருந்து புறப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து வழமையாக இந்த தொடருந்து பகல் 12.15 பயணத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.