இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் சநதித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அனுரகுமார, புதுடில்லி சென்றுள்ளார்.
இன்றைய சந்திப்புத் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்,
”இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிபேசினோம்.
மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.