சாந்தனை அழைத்துவர ஜனாதிபதி ரணில் இணக்கம்!

சாந்தனை அழைத்துவர ஜனாதிபதி ரணில் இணக்கம்!

editor 2

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்த நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article