கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது தப்பிச்சென்றவர்களில் 28 பேர் இதுவரையில் சரணடையவில்லை என புனர்வாழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தப்பிச்சென்ற 64 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மதிய உணவு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 26 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் மூன்று பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.