பிக்பாஸ் சீசன் 07 வெற்றியாளர் அர்ச்சனா! விகடன் உறுதிப்படுத்தியது!

editor 2

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் கடந்த நூறு நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 07 வெற்றியாளராக அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

100 நாள்களைத் தாண்டி நடந்த பிக் பாஸ் சீசன் 7-ன் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கியது.

கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, மாயா, ரவீனா உட்பட 18 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள். ஒரு மாதம் கழித்து அர்ச்சனா, தினேஷ், அன்ன பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் தொடங்கியது. கமல்ஹாசன் கலந்துகொண்ட ஷூட்டிங், தற்போது வரை போய்க் கொண்டு இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா.

இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும் மூன்றாவது இடம் மாயாவுக்கும் கிடைத்துள்ளது. முன்னதாக தினேஷ், விஷ்ணு ஆகிய இருவரும் வாக்குகள் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகி இருக்கிறார் அர்ச்சனா. வாழ்த்துகள் டைட்டில் வின்னர் அர்ச்சனா!

Share This Article