இணையத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட குழு தொடர்பில் விசாரணை – TID நீதிமன்றுக்கு அறிவிப்பு!

editor 2

இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பிலான தீவிரவாதக் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குழு ஒன்று தொடர்பில் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்றுவருவதாக கொழும்பு பதில் நீதவான் பசன் அமரசிங்கவிடம் விசாரணைப்பிரிவினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக தீவிரவாதக் கருத்துக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுடன், கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தமது பிரசாரத்தை மேற்கொள்வதாக TID சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீட்டெடுக்கும் சந்தர்ப்பம் வந்துள்ளதாக அந்த நபர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் விசாரணைப்பிரிவினர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

இந்த தீவிரவாத இணையதளங்களை நடத்துபவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விசாரணைப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share This Article