வாகன இறக்குமதி தொடர்பில் எந்தத் தீர்மானமும் இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!

editor 2

வாகனங்களை இறக்குமதி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் எந்தத் தீர்மானமும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

1000க்கும் குறைவான இயந்திரத் திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றின்போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாகன இறக்குமதி முக்கியமானதாக இருந்தாலும் இந்த நாட்டில் வாகன இறக்குமதிக்காகவே அதிக டொலர்கள் செலவிடப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போது நாட்டில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதா இல்லையா, பயன்படுத்திய வாகனங்களின் இறக்குமதிக்கான வரம்பு, நாட்டுக்கு அவசரமாக தேவைப்படும் வாகனங்களின் வகைகள் போன்றவற்றை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This Article