புத்தாண்டு நாளான கடந்த இரவு யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் கடற்கரையில் வாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோதே குறித்த அவலம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டு என்பதால் நண்பர்கள் இணைந்து மது அருந்திவிட்டு இரவு குதூகலமாக கொண்டாடி ஆடிப்பாடி இரவு தூக்கத்துக்குச் சென்ற நிலையில் அவர்கள் உறங்கிய வாடி தீக்கிரையானதாக தெரியவந்துள்ளது.
தீப் பரவலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இதில் மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் மற்றும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே என்று தெரியவந்துள்ளது.