ரஜினியின் “வேட்டையன்” படத்தின் புதிய விடியோ வெளியாகியது! (இணைப்பு)

editor 2

நடிகர் ரஜினியின் புதிய படத்தின் தலைப்புடன் புதிய விடியோ வெளியாகியுள்ளது. ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியின் ‘ரஜினி 170’ படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடிக்கின்றனர். 

திருவனந்தபுரத்தில் தொடங்கி மும்பை, சென்னை, திருநெல்வெலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

மும்பையில் அமிதாப் பச்சனுடன் இணைந்து படப்பிடிப்பு நடந்தது. 

இதையடுத்து சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ரஜினியின் பிறந்த நாளையொட்டி தற்போது இப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Share This Article