இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை!

editor 2

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம், எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகமாக்கும் நிலை ஏற்படும் என தொழில்நுட்ப அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அடிப்படை இல்லாமல் எமக்கு முன்னேறிச் செல்ல முடியாது. நாட்டை முன்னேற்ற முடியாது. அதேபோன்று விவசாயம் மற்றும் நவீனப்படுத்தல் தொடர்பில் பேசுவதன் மூலம் கிடைக்கும் பயன்பாடுகளை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்பதே அதன் நோக்கமாகும். அதற்காக  நாங்கள் நவீன தொழில்நுட்ப விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

எங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பே இருக்கிறது. அதன் மூலம் நாங்கள் முடியுமான பிரயோசனம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக இருக்கும் ஒரே தீர்வு தொழில்நுட்ப விவசாயத்துக்கு இணைப்பதாகும். 

அதனால் நாங்கள் வேளாண் தொழில்நுட்ப முறை தொடர்பில் நாங்கள் ஆராயச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இருக்கிறோம். இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்க தனியார் துறைக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

அதேபோன்று வலுசக்தி தொடர்பில் தெரிவிப்பதாக இருந்தால், நாங்கள் பல கிகாவோட்களை காற்றாலை மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளோம். அதேபோன்று 200 கிகாவோட் சூரிய சக்தி மின்சாரம் மூலம் பெற்றுக்கொள்வோம். நாங்கள் இந்தியாவிடமிருந்து உதவி பெற்றுக்கொண்ட முறையும் இருக்கிறது. கிரீன் ஹைடிஜன் மற்றும் அமோனியா முறையாகும். இதில் ஹைடிஜன் முறையை கடல்சார் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறோம். இது போன்ற துறைகளில் வித்தியாசம் இருக்கிறது.

ஜேர்மன் மற்றும் பிரான்ஸுடன் நாங்கள் கிரீன் தொழில்நுட்பம் தொடர்பாக கலந்துரையாடி இருக்கிறோம். 

மேலும் 4, 5 வருடங்கள் செல்லும்போது அதாவது 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம் எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகமாகும் நிலை ஏற்படும். 

முன்னர் எங்களுக்கு பாெறியியல் தொழில்நுட்பம் இருந்தது. கடந்த காலத்தில் எமது பொறியியல் தொழில்நுட்பத்துக்கு எந்தவொரு நாட்டுக்கும் சமமாக முடியாமல் இருந்தது. எகிப்து பிரமிட்களுக்கு சமமாக எமது நாட்டில் சைத்தியம் அமைக்கப்பட்டிருந்தது. 

தண்ணீரை மேல்மாடிக்கு கொண்டுசெல்ல முடியுமான முறை அமைக்கப்பட்டிருந்தது. சிகிரியாவில் அது இருந்தது. அவர்கள் பட்டம் பெற்றவர்கள் அல்ல.

எனவே, நாங்கள் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்போம். இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கொத்தலாவல பல்கலைக்கழகத்துக்கு குருணாகலை மற்றும் சீதாவக ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களையும் இணைப்போம் என்றார்.

Share This Article