யாழில் ஆலய விக்கிரகங்களின் கீழிருந்த பொற்காசுகள் திருட்டு! பூசகர் கைது!

editor 2

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரகங்களின் கீழ் இருந்த தகடு மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை பெயர்த் தெடுத்து அவற்றின் கீழ் இருந்த தங்கத்தகடு மற்றும் பொற்காசு என்பற்றை சந்தேகநபர் திருடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஐந்து பவுண் பொற்காசு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரே கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article