இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகளை இந்திய கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய கரையோர கண்காணிப்பு பொலிஸார் தென் கடலில் உள்ள முசல் தீவு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று செல்வதை அவதானித்து தடுத்து நிறுத்த முற்பட்டபோது சந்தேக நபர்கள் படகை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த படகை சோதனையிட்ட கரையோர பொலிஸார் அதிலிருந்து சுமார் ஒரு இலட்சம் வலி நிவாரண மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளனில் இருந்து தெரியவந்துள்ளதுடன், படகு பதிவுசெய்யப்படாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பியோடிய சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இந்திய கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.