அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கியில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு அதனை செலுத்தவில்லை என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரபல வர்த்தகர்கள் 10 பேரே இவ்வாறு கடனைப் பெற்று அதனை மீளச் செலுத்த வில்லை. இவர்களின் பெயர்களை வெளியிடுவது பாராளுமன்றத்தின் பொறுப்பு என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த விசேட மாநாட்டிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் அதிக தொழில் செய்து அரசியல் பாதுகாப்பை பெற்று சம்பாதித்த பணத்தை அந்தந்த நாடுகளில்வங்கிகளில் வைப்பு செய்துள்ளனர். இந்
நிலையில், அவர்கள் இலங்கை வங்கிக்கு 5 ஆயிரம் கோடி ரூபாயையும் மக்கள் வங்கிக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயையும் இவர்கள் வழங்க வேண்டியுள்ளது – என்றும் தெரிவித்தார்.