நினைவேந்தலில் ஈடுபட்டோர் கைது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை!

editor 2

மாவீரர்களை அமைதியாக நினைவுகூர்ந்த தமிழர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை, வடக்கு – கிழக்கில் நினைவேந்தலை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களின் சிவில் மனித உரிமை களை நிலைநாட்டுமாறு நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்கில் அமைதியான நினைவுகூரல்களின் போது தமிழர்கள் கைதுசெய்யப் பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனைண்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள் தமிழர்களின் நினைவுரல்களை தடுக்க முயலும் இலங்கை பொலிஸாரின் வரலாற்றின் தொடர்ச்சியே என்றும்
அவர் கூறியுள்ளார்.

Share This Article