மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் காலமானார்!

editor 2

இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் மூத்த ஆசிரியர்களில் ஒருவராக விளங்கிவந்த பாரதி இராஜநாயகம் இன்று காலமானார்.

யாழ்.முரசொலிப் பத்திரிகையில் தன்னுடைய ஊடகப் பயணத்தை ஆரம்பித்த அவர் பின்னர் கொழும்பில் வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றியிருந்தார்.

35 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகைத் துறையில் இயங்கிய அவர், தினக்குரல் வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியராக நீண்டகாலமாக பணியாற்றியிருந்தார்.

மீண்டும் வீரகேசரியின் வடக்கு மாகாணத்திற்கான ஆசிரியராக பணியாற்றியிருந்த அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள வீரகேசரிக் காரியாலயத்தில் கடமை நேரத்தில் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானார்.

இந்நிலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு தற்போது வயது 61.

இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியிருந்த அவர் பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் அரசியல் மற்றும் சமூகம் சார் கட்டுரைகளை எழுதி வந்திருந்தார்.

Share This Article