அலெக்ஸின் மரணத்துக்கு நீதிகோரி வட்டுக்கோட்டையில் போராட்டம்! (படங்கள்)

editor 2

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது.

நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

போராட்டத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

Share This Article