அமெரிக்காவுக்குச் சொந்தமான RM பார்க்ஸ், ஷெல் நிறுவனம் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் இலங்கையில் எரிபொருள் நிலையத்தைத் திறந்துள்ளமை பெருமையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இந்த நிறுவனமும் பங்களிப்பு வழங்கும் என ஜூலி சங் கூறினார்.

