நினைவேந்தல் தடைக் கோரிக்கை மனுக்களை யாழ்.நீதிமன்றமும் நிராகரித்தது!

editor 2

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளினால் கடந்த சனிக்கிழமை இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தடை கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஊர்காவற்றுறை பொலிஸாரால் பொலிஸாரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article