மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதுதவிர, மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை இடம்பெறவுள்ள “நாம் 200” தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு அவர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
அத்துடன், கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய – இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டிலும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்த உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.