Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கடற்படைச் சிப்பாய் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலைமன்னார், ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தலைமன்னார் தலைமையகப் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தினேஷ் மதுஷான் ஜயசேகர என்ற கடற்படை…
படியில் இருந்து தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்தே குறித்த குழந்தை…
கடந்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும் - இவ்வாறு ஐ. நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நாடா அல்-நஷிப் எச்சரித்துள்ளார்.…
வெவ்வேறு இரு இடங்களில் இன்று காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். பொலனறுவை மாவட்டம், வெலிக்கந்தையில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் சாவடைந்துள்ளார். வெலிக்கந்தையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் வயல் காணியில் காவலுக்கு நின்ற வேளை…
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரைத்…
தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (21) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போதகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்…
வடக்கு மாகாணத்தில் ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா பாடசாலை வளாகத்தில் அதிபர் குலேந்திரகுமார் தலைமையில் இன்று (21) நடைபெற்றது. இதில்…
"வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைக் கூறுகின்றார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது. அதனைத் தெரிந்துகொள்வதற்காகவே நான் இன்று இங்கு (குருந்தூர் மலை) வந்தேன்." - இவ்வாறு குருந்தூர் மலையில்…
பசறையில் இருவேறு பகுதிகளில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை, கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 69 போதை மாத்திரைகளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பசறை – பராக்கிரம…
3 ஆயிரத்து 200 கடல் சங்குகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 200 கடல் சங்குகளை இன்று (21) பிற்பகல் மீட்டுள்ளதாகக் கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர். பல்வேறு அளவிலான கடல்…
முல்லைத்தீவு - குருந்தூர் மலைப் பகுதிக்குப் புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வருகை தருவதை முன்னிட்டுத் தமிழர்கள் தங்கள் காணி விடுவிப்பை வலியுறுத்தியும், நீதிமன்ற வழக்கை நடைமுறைப்படுத்த கோரியும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். குருந்தூர் மலைப்…
வவுனியாவில் தீ பிடித்து எரிந்த வீட்டினுள் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்று தீ பிடித்து எரிகின்றது என இன்று காலை வவுனியா பொலிஸாருக்கும் மாநகர சபை தீயணைப்புப் பிரிவுக்கும்…
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார்,…
கொழும்பில் மேலுமொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொடை மற்றும் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையடுத்து கொட்டாவையிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை…
"யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை தேவையற்றது. அந்தக் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக முழுமையாக மீளப்பெற வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் செய்ததைப் போன்று வலிகாமம் வடக்கிலும் செய்ய வேண்டும்."…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account