சஜித்துடன் கை கோர்க்கிறார் டலஸ்!

சஜித்துடன் கை கோர்க்கிறார் டலஸ்!

Editor 1

சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஐக்கிய
மக்கள் சக்தியுடன் இணையத் தீர்மானித்துள்ளார்.

சுதந்திர மக்கள் சபையின் பல உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உட்பட டலஸூடன் கடந்தகாலத்தில் இணைந்து செயல்பட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதசவுக்கு நேரடியாக ஆதரவு
வழங்கியுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும மாத்திரம் தனியாகச் செயல்பட்டு வந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பிரதமர் பதவி வழங்கவேண்டு மென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் பிரதித் தலைவர் பதவியை வழங்கவேண்டுமென்றும் டலஸ் அழகப்பெரும கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.

என்றாலும், அதனை சஜித் பிரேதாச நிராகரித்து வந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே டலஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியில்
இணையும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

Share This Article