2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்கிறார் மஹிந்த!

editor 2

அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் நிச்சயம்
இடம்பெறும்.எனது தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுன தேசிய தேர்தல்களில்
போட்டியிடும். தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே போட்டி நிலவும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இஸ்ரேல் – பலஸ்தீனம் மோதல் தொடர்பில் கொழும்பில் உள்ள பலஸ்தீனத்துக்கான தூதுவரை நேற்று திங்கட்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி – ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகிறதே?

பதில் – அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்
நிச்சயம் இடம்பெறும்.

கேள்வி – புதிய அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளமை பற்றி
உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் – தேர்தல் ஒன்று இடம்பெறும் காலத்தில் புதிதாக அரசியல் கட்சிகள்
தோற்றம் பெறுவது இயல்பானதே. ஆனால் தேர்தலில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article