மீண்டும் QR நடைமுறையா?

editor 2

இலங்கையில் நடைமுறையிலிருந்து தற்போது கைவிடப்பட்டுள்ள, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான QR முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு, எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

QR முறைமையை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Share This Article