இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஊவாஇ சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன்இ மேல்இ தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.