மின்னல் குறித்து எச்சரிக்கை!

மின்னல் குறித்து எச்சரிக்கை!

editor 2

நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த பகுதிகளில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share This Article