யாழ்ப்பாணம், தெல்லிப்பளை காவல் துறை பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக வந்திருந்த இளம் பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த பெண் கடத்தப்பட்ட வேளையில், நபர் ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியை அடிப்படையாக வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடத்தப்பட்ட யுவதி, 22 வயதான வாலிபர் ஒருவரை பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து தலைமறைவாக இருந்து வந்ததாகவும், அண்மையில் அவர்களின் இருப்பிடம் அறிந்த பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாகும் அதன் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த யுவதி கடத்தப்பட்ட போது காயமடைந்த வாலிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.