கிழக்கின் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களில் ஈடுபடத் தடை!

editor 2

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சுற்று நிருபமொன்றை மாகாண கல்விச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தாங்கள் கற்பிக்கும் பாடத்தை பாடசாலை நேரத்துக்கு அப்பால் வெளியே அல்லது வார இறுதி நாட்களில் கட்டண அடிப்படையிலான பயிற்சி வகுப்புகள் நடத்தி கற்பிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடைப்பிடிக்காத ஆசிரியர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாடசாலை மேலதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்ய மாகாண கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவிற்கு அல்லது 026 – 7 500 500 என்ற இலக்கத்திற்கு ஆளுநரின் பொது முறைப்பாடுகள் பணியகத்தின் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share This Article