இலங்கையில் சைபர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது!

இலங்கையில் சைபர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது!

editor 2

இலங்கையில் முன்மொழியப்பட்ட சைபர் பாதுகாப்பு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிஜிற்றல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான ஒரு பிரத்தியேக சைபர் பாதுகாப்பு ஆணையகத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டத்தில் அடங்கும்.

அதன்படி, வரைவுச் சட்டம் தற்போது சட்ட வரைவாளர் துறையில் மதிப்பாய்வு
செய்யப்படுகிறது.

அரசாங்கம் தேசிய டிஜிற்றல் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு
முன்னுரிமை அளித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article