மட்டக்களப்பில் முதலை இழுத்துச் சென்ற மீனவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் முதலை இழுத்துச் சென்ற மீனவரின் சடலம் மீட்பு!

editor 2

மட்டக்களப்பு – மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் மூவருடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது முதலை இழுத்துச் சென்றது.

இந்த நிலையில் அவரைத் தேடும் பணியில் மீனவர்கள், பொலிஸார், சுழியோடிகள், பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்றுக் காலை ஆற்றிலிருந்து தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட
நிலையில் அவர் சடலமாகமீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் இப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவம் நடந்தேறியுள்ளமை இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article