கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பலான கிரி பிமா சுசி – 945 நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான கிரி பிமா சுசி – 945 எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் குறித்த கப்பலானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டிலிருந்து வெளியேறியது.
இந்த கப்பலானது கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது.
இந்த இந்தோனேசிய கடற்படைப் கப்பலானது தளபதி எம். சதி லூபிஸ் தலைமையில் 95 பயணிகளால் நிர்வகிக்கப்படுகின்றது.
கப்பலின் பணியாளர்கள் நாட்டிலிருந்த காலப்பகுதியில் நாட்டின் சில சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல சந்தர்ப்பமும் வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த கிரி பிமா சுசி – 945 எனும் கப்பலானது நேற்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.