பிரபல இலக்கியவாதியும் கதைசொல்லியுமான பவா செல்லத்துரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
தன்னுடைய நிலை தொடர்பில் அவர் பிக்பாஸுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
அவர் பிக்பாஸிடம் தெரிவித்தவை வருமாறு,
நான் என்ன நினைத்து வந்தேன் என்றால், இது வரையில் ஒரே மாதிரியான வாழ்க்கையில் இருந்தோம். இது கம்பளீட்டா வேற 20 பேருடன் புதிய வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்து வந்தேன்.
ஆனா இங்க ஒவ்வொரு நாளும் டாஸ்க் இருக்கு, மனித மனதுக்குள் பயங்கரமான குரூரம் இருக்கு அது ஒவ்வொருத்தருகிட்டேயிருந்தும் வெளிப்படுகிறது.
அது வெளிப்படும் தப்பில்லை. எனக்கு கூட வெளிப்படும் என்றுதான் நான் வந்தேன். ஆனா இங்க ஒவ்வொரு நிமிடமும், இவங்க அவர்களை குத்துவது, அவர்களை கீழ்மை படுத்துவது இதெல்லாம் நடக்கிறது. என் வாழ்க்கையில் இப்படி நான் இருந்ததில்லை.
நான் மனித மனசின் மேன்மைகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவன். எனக்கு இங்க பயங்கர டிஸ்டர்ப் மூடாகிவிட்டது.”
“எனக்கு உடனே செல்லவேண்டும் என்ற மன நிலை மட்டும்தான் உள்ளது. வேறஎதுவும் கிடையாது. என்னால இருக்கவே முடியலை. ப்ளீஸ்…”
என்று அவர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, பிக்பாஸ் விட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார் பவா செல்லத்துரை.