நாகையிலிருந்து கப்பல் காங்கேசன்துறை வந்தது! (காணொளி)

editor 2

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் இன்று (08.10.2023) இடம்பெற்ற நிலையில், இன்று மதியம் 1.45 மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இவ்வாறு வந்தடைந்த கப்பல் 10ஆம் திகதி பயணிகளை ஏற்றியவாறு இந்தியா – நாகபட்டினம் நோக்கி பயணிக்கவுள்ளது.

கப்பலில் 150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக இலங்கைப் பெறுமதியில் 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

Share This Article