இஸ்ரேலிய பாலஸ்தீன மோதலில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.
வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பும் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் வன்முறைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேல் தலைநகரில் ரமல்லாவில் உள்ள தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்தவண்ணமும் உள்ளன மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்புகொண்டுள்ளன என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர் ஒருவர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.