இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் இஸ்ரேலியர்கள் 300 இற்கும் அதிகமானோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1,500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் பலஸ்தீனியர்கள் 232 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பாஸ்தீனியர்கள் ஆயிரத்து 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தொலைத்தொடர்பு மையங்கள், முக்கிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
பிந்திய தகவல்களின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.