புதிய பாப்பரசர் தெரிவானார்!

புதிய பாப்பரசர் தெரிவானார்!

editor 2

உலகளாவிய ரீதியிலுள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

புதிய திருத்தந்தையைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றும் வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெற்றது. 

அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் மேல் பகுதியிலுள்ள குழாயிலிருந்து வெண்மையான புகை இன்று வெளியேறியுள்ளது. 

அதன்படி,  அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் புதிய பாப்பரசராக நியமிக்கப்பட்டுள்ளார்

சிக்காகோவில் பிறந்த பிரீவோஸ்ட், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அங்கு அகஸ்டீனியர்களுக்காகப் பணியாற்றினார்.

1985 முதல் 1986 வரை பெருவில் திருச்சபை போதகர், மறைமாவட்ட ஆயர் , செமினரி ஆசிரியர் மற்றும் நிர்வாகியாகப் பணியாற்றினார். 2023 இல் அவர் பேராயராக பதவி உயர்வு பெற்றார்.

Share This Article