முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுகூடி ஆராய்ந்தனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் அடுத்த வாரம் வடக்கு கிழக்கு சார்ந்த வகையில் நிர்வாக முடக்க போராட்டத்திற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா, வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா, கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் நிர்வாக முடக்க நடவடிக்கை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.