நல்லூர் சர்ச்சைக்குரிய அசைவ உணவகம் சைவ உணவகமாக மாற்றப்பட்டது!

நல்லூர் சர்ச்சைக்குரிய அசைவ உணவகம் சைவ உணவகமாக மாற்றப்பட்டது!

editor 2

நல்லூர் ஆலய சூழலில் திறக்கப்பட்ட அசைவ உணவகம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து சைவ உணவகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நல்லூர் ஆலயம் அருகில் யாழ். மாநகர சபை முன்பாக இலங்கையின் முன்னணி உணவகம் ஒன்று தனது கிளையை திறந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. இதனிடையே, உணவகத்தின் பெயர் பலகை நேற்று முன்தினம் யாழ். மாநகர சபையால் அகற்றப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Share This Article