நுவரெலியா – கண்டி வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 23 பேர் படுகாயம்!

நுவரெலியா - கண்டி வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 23 பேர் படுகாயம்!

editor 2

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து கடந்த இரவு வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் உட்பட்ட 23 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர்களில் 20 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பயணிகள் குருநாகல் மற்றும் கிரிப்பன் வெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பேருந்தில் 54 பேர் பயணித்தனர் என்றும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.





Share This Article