மின்சாரம் தாக்கியதில் யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் மரணம்!

மின்சாரம் தாக்கியதில் யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் மரணம்!

editor 2

மரத்தில் தடி வெட்டிய போது, அது மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி அதனை வெட்டிய குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

சுன்னாகம், மின்சார நிலைய வீதியில் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் இ.சிறீகாந்தன் (வயது 48) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்த குடும்பஸ்தர், நேற்று முன்தினம் பூவரச மரத்தில் தடி வெட்டியுள்ளார். வெட்டப்பட்ட தடி மின்கம்பியில் விழுந்து அவருடன் தொடுகை ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் மின்சாரத்தால் தாக்குண்டு தூக்கிவீசப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரின் சடலம் உடற்கூற்றாய்வு பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபால சிங்கம் மேற்கொண்டார்.

Share This Article