அரச வங்கிகளை விற்க நடவடிக்கை

editor 2

அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு பிரிவினரும் மத்திய வங்கி ஆளுநரும் முன்வைக்கும் முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம்வலியுறுத்தியுள்ளது.

விசேட நிறுவனத்துக்கு மாற்றப்படவுள்ள 31 அரச நிறுவனங்களில் அரச வங்கிகள் உள்ளனவா இல்லையா என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும் என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேன நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த 4ஆம் திகதி அரச தொழில் நிறுவன சீர்திருத்த பிரிவு நடத்திய பயிலரங்கில், 31 அரசு நிறுவனங்களில் 6 வங்கிகள் சிறப்பு நிறுவனத்துக்கு மாற்றப் படவுள்ளன என்று கூறப்பட்டது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநர் அவ்வாறானவற்றை உறுதிப்படுத்தாத காரணத்தால் இரு தரப்பினரும் முரண்பாடான கதைகளை கூறி வருகின்றன.

தேசிய சேமிப்பு வங்கியை விற்க அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றும் அவர் சாடினார்.

Share This Article