மயிலத்தமடு – மாதவனை பகுதிக்கு பிக்குகள் 50 பேர் வருகை!

editor 2

‘மயிலத்தமடு – மாதவனை பகுதிக்கு 50 பிக்குகளும் 400இற்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்களும் வந்துள்ளனர்.

இவர்கள் எங்கள் மேய்ச்சல் தரையை வேகமாக ஆக்கிரமித்து வருகின்றனர்’, இவ்வாறு அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக கால்நடை பண்ணைகளை நடத்தி வரும் தமிழ் மக்கள் தெரிவித்தனர இதேநேரம், ‘எங்களுக்கு தீர்வு பெற்றுத்தராதவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் நடத்தும் போராட்டத்துக்கும் ஆதரவு வழங்க முன்வராதமை கவலைக்குரியது என்றும்அவர்கள் சாடினர்.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் நேற்று சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் முன்பாக பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேநேரம், தமிழ் கால்நடை பண்ணையாளர்கள் நேற்றுடன் 22ஆவது நாளாக சித்தாண்டி மகா வித்தியாலயம் முன்பாக பந்தல் அமைத்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ‘மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏறாவூர் நீதி மன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதும் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும் வருகை தராததால் வழக்கு பிற்போடப்பட்டது’, என்றும் மக்கள் மேலும் சாடினர்.

தவிர, தமது பிரச்னைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு வருகை தரும்போது தீர்வு தர வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

Share This Article