துமிந்த திசாநாயக்க கைது!

துமிந்த திசாநாயக்க கைது!

editor 2

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். 

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று நேற்று முன் தினம் கைப்பற்றப்பட்டது. 

இதுதொடர்பாக கைதான இரண்டு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கி அநுராதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்தநிலையில், இன்று பம்பலபிட்டி பகுதியில் வைத்து துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article